நோய்த்தாக்கம் காரணமாக பப்பாசி செய்கை அழிவு!

IMG 6062
IMG 6062

வவுனியாவில் மழை காரணமாக ஏற்பட்ட நோய்த்தாக்கத்தினால் பப்பாசி செய்கை அழிவை சந்தித்துள்ளது.
வவுனியாவில் கடந்தவருட இறுதியில் பெய்த கடும் மழை காரணமாக பப்பாசி மரங்களிற்கு ஒருவிதநோய் ஏற்பட்டுள்ளது. இதனால் அறுவடை நிலைக்கு தயாராகியிருந்த பப்பாசி காய்கள் பழுதடைந்து மரங்களில் இருந்த படியே அழுகி விழுகின்றது.

IMG 6048


இதனால் தமது வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதுடன், கடன் பட்டே தமது பயிர்செய்கை நடவடிக்கைகளை முன்னெடுத்த நிலையில் தற்போது அறுவடைக்காலத்தில் ஏற்பட்டுள்ள நோய் காரணமாக வருமான இழப்பை சந்தித்துள்ளதாக விவசாயிகள் கவலை தெரிவித்துள்ளனர்.

IMG 6068


இதேவேளை காய்களில் நோய் ஏற்பட்டுள்ளமையால் நல்லநிலையில் உள்ள பப்பாசிகாய்களை மிகவும் குறைந்த விலைக்கே வியாபாரிகளிற்கு விற்பனை செய்து வருவதாகவும் அவர்கள் தெரிவிக்கின்றனர்.
வவுனியாவில் கடந்தவருட இறுதியில் பறங்கியாறு, சாஸ்திரிகூழாங்குளம், தாலிக்குளம் உட்பட பல பகுதிகளில் பப்பாசி செய்யை பெரிய அளவில் முன்னெடுக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.