பாகிஸ்தான் செல்லவுள்ள பிரதமர் மகிந்த ராஜபக்க்ஷ

pakistan foreign minister
pakistan foreign minister

பாகிஸ்தானிற்கு விஜயம் செய்யுமாறு அந்நாட்டு பிரதமர் விடுத்த அழைப்பினை பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ ஏற்றுக் கொண்டுள்ளார்.

இலங்கைக்கு விஜயம் செய்துள்ள பாகிஸ்தான் வெளிவிவகார அமைச்சர் ஷாட் மஹ்மூத் குரைஸி, பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவிற்கிடையில் அலரி மாளிகையில் இடம்பெற்ற சந்திப்பின் போது இந்த அழைப்பினை விடுக்கப்பட்டுள்ளது.

இதன்போது பாகிஸ்தான் வெளிவிவகார அமைச்சர் அந்நாட்டு பிரதமர் இம்ரான் கானின் விஷேட கடிதம் ஒன்றையும் பிரதமரிடம் ஒப்படைத்திருந்தார்.

இதேவேளை இலங்கை ஜனாதிபதியுடனான சந்திப்பில் தமது நாட்டுக்கு அரசமுறைப் பயணமொன்றினை மேற்கொள்ளுமாறு ஜனாதிபதிக்கு அழைப்பு விடுத்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.