ஏறாவூர்பற்று பிரதேசத்திற்குட்பட்ட மக்கள் பாதிப்பு!!

eravur pattu1
eravur pattu1

மட்டக்களப்பு மாவட்டத்தின் ஏறாவூர் பற்று பிரதேச செயலகத்திற்குட்பட்ட ஏறாவூர்-04, ஏறாவூர்-05, செங்கலடி, ஐயன்கேனி, குடியிறுப்பு ஆகிய பிரதேசங்களில் சில தினங்களாக பெய்த கன மழையினால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்படைந்துள்ளது.

கன மழையின் காரணமாக தாழ்நில பிரதேசங்கள் வெள்ளநீரில் மூழ்கியுள்ளதுடன் மக்கள் வீட்டை விட்டு வெளியேற முயாத வகையில் வெள்ள நீர் சூழ்ந்து காணப்படுகின்றது.

முந்தைய காலங்களில் வெள்ள நீரினால் பாதிக்கப்பட்ட வேளையில் உரிய அரச அதிகாரிகளினால் கவனிப்பாரற்று நிவாரணங்கள் பெற்றுக்கொடுக்கப்படவில்லை என இப்பிரதேச மக்கள் அங்கலாய்க்கின்றனர்.

அத்துடன் ஏறாவூர் நகர பிரதேச செயலகப் பிரிவிற்குட்பட்ட பகுதிகளில் சுமார் 1000 குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக பிரதேச செயலாளர் தெரிவித்தார்.

கன மழையினால் ஏற்பட்டுள்ள வெள்ளத்தினால் வீடுகளை சூழ வெள்ள நீர் தேங்கி காணப்படுகின்றது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.

எவ்வாறாயினும் தேங்கி நிற்கும் வெள்ள நீரை விரைவாக வெளியேற்றுவதில் ஏறாவூர் நகர சபையுடன் இணைந்து பிரதேச செயலக அலுவலர்களும் இடர் முகாமைத்துவ உத்தியோகத்தர்களும் பணியாற்றி வருவதாக பிரதேச செயலாளர் தெரிவித்தார்.

இந்தப் பகுதிகளிலிருந்து வெள்ள நீரை ஏறாவூர் வாவிக்கூடாக வெளியேற்றுவதில் அதிகாரிகள் முயற்சி மேற்கொண்டுள்ளனர்.