யாழ்.பல்கலையின் பொது பட்டமளிப்பு விழா

Jaffna
Jaffna

யாழ்ப்பாண பல்கலைக்கழக 34 ஆவது பொதுப் பட்டமளிப்பு விழாவின் இரண்டாவது பகுதி எதிர்வரும் 6ஆம், 7ஆம், 8ஆம் திகதிகளில் நடைபெறவுள்ளது.

பல்கலைக்கழகத்தின் வேந்தர் பேராசிரியர் எஸ்.பத்மநாதன் தலைமையில் 11 அமர்வுகளாக நடைபெறவுள்ள பொதுப் பட்டமளிப்பு விழாவில் கலைப்பீடம், விஞ்ஞான பீடம், முகாமைத்துவக் கற்கைகள் , வணிகபீடம், விவசாய பீடம், மற்றும் மருத்துவ பீடத்தைச் சேர்ந்த 1369 உள்வாரிப் பட்டதாரிகளுக்கும், உயர் பட்டப் படிப்புகள் பீடத்தைச் சேர்ந்த 64 பட்ட பின்படிப்பு பட்டதாரிகளுக்கும், 31 டிப்ளோமாதாரிகளுக்கும் பட்டங்களும், தகைமைச் சான்றிதழ்களும் வழங்கப்படவுள்ளது.

அத்துடன் 348 வெளிவாரிப்பட்டதாரிகளின் பெயர்கள் வாசிக்கப்பட்டு பட்டங்கள் உறுதிப்படுத்தப்படவுள்ளன என்று யாழ்ப்பாண பல்கலைக்கழக தகுதி வாய்ந்த அதிகாரி பேராசிரியர் க. கந்தசாமி தெரிவித்துள்ளார்.

பட்டமளிப்பு விழா தொடர்பாக இன்று காலை யாழ். பல்கலைக்கழகத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இந்த விபரங்களை வெளியிட்டார்.

பட்டமளிப்பு விழாவில் பட்டம் பெறுவோரின் விபரங்கள் வருமாறு :

பட்டப்பின் தகைமைகள் :

கலாநிதி 03,
முதுமெய்யியல்மாணி 19,
தமிழில் முதுகலைமாணி 36,
முது நிருவாக வியாபாரமாணி 06

உள்வாரிப் பட்டதாரிகள் :

வியாபார நிருவாகமாணி 268,
வணிகமாணி 49,
சட்டமாணி 105,
சிறப்புக் கலைமாணி 302,
பொது கலைமாணி 65,
நுண்கலைமாணி சங்கீதம் 81,
நுண்கலைமாணி நடனம் 61,
நுண்கலைமாணி சித்திரமும் வடிவமைப்பும் 26,
வைத்தியமாணி சத்திரசிகிச்சைமாணி126,
தாதியியல் விஞ்ஞானமாணி 15,
மருத்துவ ஆய்வுகூட விஞ்ஞானமாணி 17,
மருந்தகவியல்மாணி 11,
விஞ்ஞானமாணி (சிறப்பு) 90,
விஞ்ஞானமாணி (பொது) 66,
கணனி விஞ்ஞானத்தில் (சிறப்பு) விஞ்ஞானமாணி 20,
கணனி விஞ்ஞானத்தில் விஞ்ஞானமாணி 02,
விவசாய விஞ்ஞானமாணி 65

வெளிவாரி பட்டதாரிகள் :

கலைமாணி (வெளிவாரி) 256,
வணிகமாணி (வெளிவாரி) 40,
இசைமாணி (வெளிவாரி) 01,
நடனமாணி (வெளிவாரி) 03,
வியாபார முகாமைத்துவமாணி(வெளிவாரி) 48,

டிப்ளோமாதாரிகள் :

விஞ்ஞானத்தில் தகமைச்சான்றிதழ் 03,
வியாபார நிர்வாகத்தில் தகமைச்சான்றிதழ் 01,
மனிதவளமுகாமைத்துவத்தில் தகமைச்சான்றிதழ் 06,
நுண்நிதியியலில் தகமைச்சான்றிதழ் 21