தேர்தலில் வெற்றிபெறா விட்டால் சினிமாவிற்கே செல்கிறேன்

ranjan ramanayake1
ranjan ramanayake1

அடுத்த பொதுத் தேர்தலில் தான் வெற்றி பெறா விட்டால் சினிமாவிற்கே திரும்பி சென்று விடுவதாக ஐ.தே.க இன் பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்க தெரிவித்துள்ளார்.

அத்துடன் பொதுத்தேர்தலிற்கான வேட்புமனு வழங்காவிட்டால் சுயேட்சையாக போட்டியிடபோவதாகவும் ஆயினும் கட்சிமாறப் போவதில்லை என தெரிவித்துள்ளார்.

ஐ.தே.கட்சி எனக்கு வேட்பு மனுக்களை வழங்காது என எனக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்ட அவர், தான் என்ன தவறு செய்தேன்? என்றும், கேள்வி எழுப்பியுள்ளார்.

அத்துடன் தான் சில துறவிகளை அவமதித்ததாகவும், எனினும் எல்லா மரியாதைக்குரிய மகா சங்கங்களுக்கும் தான் இதைச் சொல்லவில்லை என்றும் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் கம்பஹா,கொழும்பு அல்லது எங்காவது வாக்குகளை மக்கள் கொடுத்தால், பாராளுமன்றத்திற்கு செல்வேன் என்றும், இல்லையெனில் வீட்டிற்குச் சென்று சினிமாவில் நடிப்பேன் எனவும் ஐ.தே.கவின் பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்க தெரிவித்துள்ளார்.