காணி சுவீகரிப்பு- உரிமையாளர்களுக்கு அவசர அழைப்பு

punkudutheevu
punkudutheevu

புங்குடுதீவு கிழக்கு 9ம் வட்டாரம் வல்லன் மலையடி நாச்சியார் கோவிலுக்கு அருகில் உள்ள காணிகளே சுவீகரிக்கப்படவுள்ளதாக புலம்பெயர்ந்து வாழும் காணி உரிமையாளர்களிற்கு அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.

இந்த காணிகளின் உரிமையாளர்கள் 14 நாட்களுக்குள் ஆட்சேபனைகளை அறியத்தருமாறு கிராம சேவகர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

உரிமையாளர்களின் விபரம்:

  1. குமாரவேலு பொன்னம்மா
  2. சின்னத்தம்பி இராசேந்திரன்
  3. சுப்பிரமணியம் மகேஸ்வரி
  4. அண்ணாமலை கங்காசபை
  5. ஐயம்பிள்ளை பாக்கியம்
  6. வேலாயுதபிள்ளை செல்லம்மா
  7. கந்தையா தியாகராசா
  8. இராசையா கோணேசலிங்கம்
  9. பஞ்சாசரம் தயாபரன்
  10. செல்வராசு அம்பிகா

இதேவேளை, கடந்த மூன்று வருடங்களாக புங்குடுதீவை அண்டிய காணிகளை சுவீகரிக்க முயற்சி மேற்கொள்ளப்பட்டு வந்த நிலையில் அவை பிரதேச மக்களினால் தடுத்து நிறுத்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் காணி சுவீகரிப்பிற்கான அறிவித்தல் நவம்பர் 22ம் திகதி, வேலணை பிரதேச செயலகத்தின் ஊடாக விடுக்கப்பட்டுள்ளது.