இன்று முதல் நான்கு நாட்களுக்கு இடம்பெறவுள்ள நாடாளுமன்ற அமர்வுகள்

SRI LANKA PARLIAMENT e1538031172788 768x384 1
SRI LANKA PARLIAMENT e1538031172788 768x384 1

இன்று முதல் எதிர்வரும் வெள்ளிக்கிழமை வரையான 4 நாட்களுக்கு நாடாளுமன்ற அமர்வுகள் இடம்பெறவுள்ளன.

இன்று முதல் எதிர்வரும் வியாழக்கிழமை வரை முற்பகல் 10.00 மணி முதல் பிற்பகல் 5.30 மணி வரையும், வெள்ளிக்கிழமை முற்பகல் 10.00 மணி முதல் பிற்பகல் 4.30 மணி வரையும் நாடாளுமன்ற அமர்வுகள் இடம்பெறவுள்ளன.

தொழில் அமைச்சினால் கடந்த 20 ஆம் திகதி நாடாளுமன்றில் சமர்ப்பிக்கப்பட்ட ஊழியர் சேமலாப நிதிய சட்டத்தின் கீழான உத்தரவு மீதான விவாதம் இன்று இடம்பெறவுள்ளதாக நாடாளுமன்ற பொதுச் செயலாளர் தம்மிக தசநாயக்க தெரிவித்துள்ளார்.

இதேவேளை, நாடாளுமன்ற கட்டடத் தொகுதியில் இன்றைய தினம் எழுமாறாக பி.சி.ஆர் பரிசோதனைகள் மேற்கொள்ளும் வேலைத்திட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது.

நாடாளுமன்ற படைக்கல சேவிதர் நரேந்திர பெர்ணான்டோ இதனைத் தெரிவித்துள்ளார்.

இதற்கமைய, இன்று முற்பகல் 9 மணிமுதல் மதியம் 12 மணிவரை எழுமாறாக பி.சீ.ஆர் பரிசோதனைகள் மேற்கொள்ளப்படவுள்ளன.

அதில் பங்கேற்பதற்காக நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளதாகவும் படைக்கல சேவிதர் தெரிவித்துள்ளார்.