ஏறாவூரில் ஆடைத்தொழிற்சாலை அமைக்க நடவடிக்கை

eravur
eravur

இலங்கை ஆடைத் தொழில்துறை மட்டக்களப்பு ஏறாவூரில் ஆடைசெயலாக்க பூங்கா ஒன்றை அமைக்கவுள்ளது.

இதற்கான திட்டத்தில் சீனா உள்ளிட்ட முக்கிய நாடுகளில் இருந்து முதலீடுகளை மேற்கொள்வதற்கு திட்டமிடப்பட்டுள்ளது. ஆடைத் தொழில்துறை தயாரிப்பிற்கான செலவீனங்களை குறைப்பதே இதன் நோக்கமாகும். இலங்கை கூட்டு ஆடை தொழில்துறை சங்கம் இது தொடர்பான முன் ஏற்பாடுகளை இலங்கை முதலீட்டு சபையுடன் மேற்கொண்டு வருகின்றது.

இந்த திட்டத்தின் கீழ் தொழிற்சாலை வலையம் ஏறாவூரில் அமைக்கப்படவுள்ளது. ஏறாவூரில் தொழில்பேட்டை வலையத்தை அமைப்பதற்காக 200 ஏக்கர் காணியை அடையாளம் காண்பதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டிருப்பதாக இலங்கை ஏற்றுமதியாளர் சங்கத்தின் தலைவர் றிஹான் லக்கானி தெரிவித்துள்ளார்.

வெளிநாட்டு ஆடை தயாரிப்பாளர் நிறுவனங்களையும் இந்த வலையத்தில் தொழிற்சாலைகளை ஆரம்பிப்பதற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.