இன்றைய காலநிலை தொடர்பான விபரங்கள்!

download 2 5
download 2 5

கிழக்கு, ஊவா மற்றும் மத்திய மாகாணங்களில் இன்றைய தினம் சில வேளைகளில் மழை பெய்யக்கூடுமென வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

அத்துடன் நாட்டின் ஏனைய பகுதிகளில் மழை இன்றிய வானிலை நிலவக் கூடுமென மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மத்திய, சப்ரகமுவ மற்றும் மேல் மாகாணங்களிலும், காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் காலையில் பனிமூட்டம் நிலவும் என வளிமண்டலவியல் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.