கடந்த 24 மணி நேர காலப் பகுதியில் நாட்டில் புதிதாக 774 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம்

download 2 7
download 2 7

இன்று (16) காலை வரையான 24 மணி நேர காலப் பகுதியில் நாட்டில் புதிதாக 774 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக கொவிட்– 19 தொற்று பரவலை தடுக்கும் செயலணி தெரிவித்துள்ளது.

அவர்களில் அதிகளவான தொற்றாளர்கள் கம்பஹா மாவட்டத்திலேயே பதிவாகியுள்ளனர்.

கம்பஹா மாவட்டத்தில் 208 பேருக்கும் கொழும்பு மாவட்டத்தில் 179 பேருக்கும் கண்டி மாவட்டத்தில் 66 நபர்களுக்கும் அம்பாறை மாவட்டத்தில் 14 பேருக்கும் பதுளை மாவட்டத்தில் 29 பேருக்கும் புத்தளம் மாவட்டத்தில் 07 நபர்களுக்கும் மாத்தளை மாவட்டத்தில் 07 நபர்களுக்கும் நுவரெலியா மாவட்டத்தில் 04 நபர்களுக்கும் மட்டக்களப்பு மாவட்டத்தில் ஐவருக்கும் திருகோணமலை மாவட்டத்தில் மூவருக்கும் யாழ். மாவட்டத்தில் ஒருவருக்கும் மன்னார் மாவட்டத்தில் ஐவருக்கும் கிளிநொச்சி மாவட்டத்தில் ஒருவருக்கும் கடந்த 24 மணி நேரத்தில் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

கொழும்பு – கோட்டை பகுதியில் 08 பேரும் கொம்பனித்தெரு பிரதேசத்தில் 13 பேரும் கொள்ளுப்பிட்டியில் 06 நபர்களும் பம்பலப்பிட்டியில் 08 பேரும் நாரஹேன்பிட்ட பகுதியில் 13 நபர்களும் வௌ்ளவத்தை பிரதேசத்தில் 07 நபர்களும் பொரளையில் 10 நபர்களும் மருதானையில் 07 பேரும் புறக்கோட்டை பிரதேசத்தில் 08 பேரும் கொட்டாஞ்சேனை பகுதியில் 08 பேரும் கிரேண்ட்பாஸ் பிரதேசத்தில் 25 பேரும் மட்டக்குளி பகுதியில் 08 பேரும் தொற்றுடன் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

கம்பஹா மாவட்டத்தின் களனி பகுதியில் ஐவருக்கும் நீர்கொழும்பு பகுதியில் 41 பேருக்கும் வத்தளை பிரதேசத்தில் 11 நபர்களுக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

புத்தளம் – தங்கொட்டுவ பகுதியில் இருவரும் மதுரங்குளி பகுதியில் இருவரும் நாத்தாண்டியா பிரதேசத்தில் ஒருவரும் புத்தளம் பிரதேசத்தில் இருவரும் தொற்றுடன் இனங்காணப்பட்டுள்ளனர்.

கந்தளாய், திஸ்ஸபுர மற்றும் திருகோணமலை ஆகிய பகுதிகளில் தலா ஒருவர் வீதம் மூவர் தொற்றுடன் பதிவாகியுள்ளனர்.

மட்டக்களப்பு – களுவாஞ்சிக்குடி பகுதியில் மூவர் மற்றும் வாழைச்சேனை பிரதேசத்தில் இருவர் தொற்றாளர்களாக பதிவாகியுள்ளனர்.

நுவரெலியா பிரதேசத்தில் ஒருவருக்கும் கொத்மலை பிரதேசத்தில் இருவருக்கும் சாமிமலை பகுதியில் ஒருவருக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

யாழ். உடுப்பிட்டியில் ஒருவர் தொற்றாளராக பதிவாகியுள்ளார்.

இதனிடையே, இன்று (16) காலை வரையில் நாட்டில் மொத்தமாக 76,428 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

அதேநேரம், 69,411 பேர் தொற்றிலிருந்து குணமடைந்துள்ளனர்.

நேற்றைய தினம் (15) வத்தளை, நுகேகொடை மற்றும் ஹங்வெல்ல உள்ளிட்ட 6 பிரதேசங்களில் 6 கொரோனா மரணங்கள் உறுதி செய்யப்பட்டுள்ளன.

இதனடிப்படையில், நாட்டில் இதுவரை 403 கொரோனா மரணங்கள் பதிவாகியுள்ளன.

நேற்றைய தினத்தில் மாத்திரம் 15,430 பிசிஆர் பரிசோதனைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.