கொரோனா தொற்றின் காரணமாக நாட்டை முழுமையாக முடக்கும் நோக்கம் இல்லை- அமைச்சரவை பேச்சாளர் உதய கம்மன்பில!

Udaya
Udaya

கொரோனா தொற்று தொடர்பில் அவ்வப்போதைய நிலைமையின் அடிப்படையில் தீர்மானங்கள் மேற்கொள்ளப்படும்.

கொரோனா தொற்றின் காரணமாக நாட்டை முழுமையாக முடக்கும் நோக்கம் இல்லை என அமைச்சரவை பேச்சாளர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.

கொரோனா தொற்றின் காரணமாக அவுஸ்திரேலியாவின் மெல்பன் நகரம் 4ஆவது முறையாக முடக்கப்பட்டது. இலங்கையில் இரண்டரை மாத காலப்பகுதியிலே இவ்வாறு முடக்கப்பட்டது. இதனால் இலட்சக்கணக்கானோர் தொழில் வாய்ப்பை இழக்கும் நிலை ஏற்பட்டது என்று அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.

நாட்டை முடக்கி செயல்படும் நோக்கம் அரசாங்கத்திற்கு இல்லை. கொரோனா தொற்றுடன் வாழும் நிலைமையை எதார்த்தமாக்கும் நிலைமை எமக்கு உண்டு நாட்டின் அபிவிருத்தி பொருளாதாரத்தை கருத்தில் கொண்டே அரசாங்கம் செயல்படுகின்றது என்றும் அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.