சுற்றுலா துறையை முன்னேற்ற வேண்டும்- கோட்டாபய ராஜபக்ஸ

Sagara 4296 1068x712 1 1
Sagara 4296 1068x712 1 1

சுற்றுலா துறை நாட்டிற்கு மிக முக்கியம் என்பதால் சவால்களை எதிர் கொண்டு, இந்தத் துறையில் புதிய பயணத்திற்கு தயாராகுமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்.

சுற்றுலா துறையின் முன்னேற்றம் தொடர்பில் ஜனாதிபதி செயலகத்தில் நேற்று (17) நடைபெற்ற கலந்துரையாடலில் ஜனாதிபதி இதனைக் கூறியுள்ளார்.

கொரோனா தடுப்பூசியை வழங்கும் போது ஹோட்டல் ஊழியர்கள், சுற்றுலா வழிகாட்டிகள் மற்றும் சாரதிகள் உள்ளிட்ட ஊழியர்களுக்கு முன்னுரிமை வழங்குவது தொடர்பில் இங்கு கவனம் செலுத்தப்பட்டுள்ளது.

சுற்றுலாப் பயணிகள் தொற்றாளர்களாக அடையாளம் காணப்படாத நிலையில், வசதிகளை பெற்றுக் கொடுப்பவர்களை தனிமைப்படுத்த வேண்டிய அவசியம் இல்லையென இதன்போது யோசனை முன்வைக்கப்பட்டுள்ளது.

கொரோனா காலத்தில் வருகை தந்த சுற்றுலாப் பயணிகளில் ஒரு வீதத்தினரே தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் இதன்போது தெரிவிக்கப்பட்டுள்ளது.