வத்தளை கெரவலபிடியவில் ஏற்பட்ட தீப்பரவல் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டது

download 22
download 22

வத்தளை காவல்த்துறைப் பிரிவிற்குட்பட்ட கெரவலபிடி பகுதியில் உள்ள கழிவு சேகரிக்கும் இடத்தில் ஏற்பட்ட தீப்பரவல் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளதாக காவல்த்துறை ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

கட்டுநாயக்க அதிவேக நெடுஞ்சாலை கெரவலபிடி நுழைவாயிலுக்கு அருகிலுள்ள கழிவு சேகரிக்கும் இடத்தில் நேற்று பிற்பகல் தீப்பரவல் ஏற்பட்டது.

உர உற்பத்தியில் ஈடுபடும் தொழிற்சாலை ஒன்றின் கழிவுகளை சேகரிக்கும் இடத்திலேயே இவ்வாறு தீப்பரவல் ஏற்பட்டுள்ளது.

இதனைத் தொடர்ந்து தீயினை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரும் பணிகளுக்காக இலங்கை விமானப்படைக்கு சொந்தமான ஹெலிகொப்டர் ஒன்று குறித்த பகுதிக்கு அனுப்பப்பட்டது.

இந்த நிலையில், குறித்த தீப்பரவல் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளதாக காவல்த்துறை ஊடகப் பிரிவு இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், தீப்பரவலுக்கான காரணம் கண்டறியப்படாத நிலையில், வத்தளை காவல்த்துறையினர் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.