ஜெனீவா மாநாட்டில் உரையாற்றவுள்ள இலங்கை வெளிவிவகார அமைச்சர்!

download 23
download 23

வெளி விவகார அமைச்சர் தினேஸ்குணவர்தன, எதிர்வரும் புதன்கிழமை ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவையின் 46வது அமர்வில் உரையொன்றை வழங்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

வெளிவிவகார அமைச்சின் தகவல்கள் இதனைத் தெரிவிக்கின்றன.

முன்கூட்டியே ஒளிப்பதிவு செய்யப்பட்ட காணொளி ஒன்று எதிர்வரும் புதன்கிழமை மாநாட்டில் காண்பிக்கப்படவுள்ளது.

எனினும் இதற்கான நேரம் குறித்து இன்னும் அறிவிக்கப்படவில்லை.

ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவையில் இலங்கை தொடர்பாக பிரித்தானியா தலைமையிலான இணைத் தலைமை நாடுகள் பிரேரணை ஒன்றை முன்வைக்கவுள்ளன.

அதேநேரம் இலங்கையின் மனித உரிமைகள் நிலைமைகள் பொறுப்புக்கூறல் விடயங்கள் உள்ளிட்ட விவகாரங்களில் அதிருப்தியையும் கண்டனத்தையும் தெரிவித்து, மனித உரிமைகள் ஆணையாளர் மிச்செல் பெச்சலெட் அண்மையில் வெளியிட்டிருந்த அறிக்கையும், இந்த மாநாட்டில் சமர்ப்பிக்கப்படவுள்ளது.

இந்த அறிக்கைக்கு இலங்கை அரசாங்கம் ஏலவே தமது பதிலை வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.