1000 ரூபாய் வழங்காத 2 கம்பனிகளை சுவீகரிக்க அரசாங்கம் அதிரடித்திட்டம்!

malaiyakam
malaiyakam

பெருந்தோட்டத் தொழிலாளர்களது நாளாந்த அடிப்படை வேதனத்தை 1000 ரூபாவாக அதிகரித்து வழங்க வேண்டும் என்று கடந்த 8ம் திகதி சம்பள நிர்ணயசபை தீர்மானித்திருந்தது.

ஆனால் அதற்கு எதிராக பெருந்தோட்ட நிறுவனங்கள் ஆட்சேபனை தெரிவித்து வருகின்றன.

இந்தநிலையில், 1000 ரூபாய் வேதனத்தை வழங்க முடியாத நிலையில் இருக்கின்ற இரண்டு நிறுவனங்களை அரசாங்கம் பொறுப்பேற்கும் என்று எச்சரிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

பெருந்தோட்டத்துறை அமைச்சின் தகவல்கள் இதனைத் தெரிவிக்கின்றன.

குறித்த இரண்டு பெருந்தோட்ட நிறுவனங்களின் பிரதிநிதிகளை எதிர்வரும் செவ்வாய்கிழமை அரசாங்கம் பேச்சுவார்த்தைக்கு அழைத்துள்ளது.

இதன்போது அந்த நிறுவனத்தின் நிதிநிலைமைகள், வருமானம், நட்டம் உள்ளிட்ட விடயங்கள் குறித்து ஆய்வு செய்து அரசாங்கம் முக்கியத்தீர்மானத்தை மேற்கொள்ளும் என்று கூறப்படுகிறது.