நாட்டில் நாளாந்த மின்சாரத்திற்கான தேவை அதிகரிப்பு!

Electricity 3 850x460 acf cropped
Electricity 3 850x460 acf cropped

தற்போது நிலவும் வரட்சி நிலைக்கு மத்தியில் நாட்டில் நாளாந்த மின்சாரத்திற்கான தேவை அதிகரித்து வருவதாக இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.

இருப்பினும், மின்சார விநியோக துண்டிப்பை மேற்கொள்ள வேண்டிய தேவை இல்லை என்று மின்சார சபையின் ஊடக பேச்சாளர் சுலக்ஷன ஜெயவர்தன தெரிவித்துள்ளார்.

பெப்ரவரி மாத ஆரம்பம் முதல் தற்போது வரை நாட்டின் மின்சார தேவை அதிகரித்து வருகின்றது. நாளாந்தம் பயன்படுத்தப்படும் மின்சார அதிகரிப்பை காணக் கூடியதாகவுள்ளது.

ஜனவரி மாத காலப்பகுதியில் பொதுமக்களின் மின்சார தேவை குறைந்த மட்டத்தில் காணப்பட்டது.

20% சதவீத நீர்மின் உற்பத்தி மூலமும் 70% அனல்மின் நிலை உற்பத்தி மூலமே தற்போது நாட்டின் மின் தேவை நிறைவேற்றப்படுகின்றது என்று அவர் மேலும் தெரிவித்துள்ளார்.