பாகிஸ்தான் பிரதமரை நாடாளுமன்றத்திற்கு அழைத்து வர வேண்டாமென சபாநாயகர் கோரிக்கை

imran khan 1 1
imran khan 1 1


தற்போதைய கொரோனா நிலைமை காரணமாக பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானை நாடாளுமன்றத்திற்கு அழைத்து வர வேண்டாம் என சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன வௌிவிவகார அமைச்சிடம் எழுத்து மூலம் கோரியுள்ளார்.

பாகிஸ்தான் பிரதமரை நாடாளுமன்றத்திற்கு அழைப்பதாக இருந்தால், நாடாளுமன்ற ஊழியர்கள் அனைவரையும் அழைக்க வேண்டி ஏற்படுவதாகவும், தற்போதைய சூழ்நிலையில் அது பொருத்தம் இல்லை​​யெனவும் சபாநாயகர் கூறியுள்ளார்.

பாகிஸ்தான் பிரதமர் எதிர்வரும் 22 ஆம் திகதி இலங்கைக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளதுடன், அவர் 24 ஆம் திகதி நாடாளுமன்றத்தில் உரையாற்றவுள்ளதாக அறிவிக்கப்பட்டிருந்தது.

இதேவேளை, ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவையின் 46 ஆவது கூட்டத்தொடர் எதிர்வரும் 22 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளதுடன், இலங்கை தொடர்பில் 24 ஆம் திகதி கலந்துரையாடப்படவுள்ளது.