அடுத்த மூன்று மாதங்களுக்கு எரிபொருள் விலையில் மாற்றமில்லை – உதய கம்மன்பில

uthaya kampanpila
uthaya kampanpila

அடுத்த மூன்று மாதங்களுக்குள் எரிபொருள் விலையை அதிகரிக்க அரசாங்கம் தயாராக இல்லை என்று எரிசக்தி அமைச்சர் உதய கம்மன்பில இன்று (23) நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.

நாடாளுமன்ற உறுப்பினர் ஹேஷா விதானகே வாய்வழி பதில் கோரி எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும்போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

இறுதியாக நல்லாட்சி அரசாங்கம் எரிபொருள் விலையை 2019 செப்டம்பரில் அதிகரித்தது, தற்போதைய அரசாங்கத்தின் கீழ் இதுவரை எரிபொருள் விலை அதிகரிக்கப்படவில்லை என்றும் அமைச்சர் கூறினார்.

சர்வதேச சந்தையில் எரிபொருள் விலையும் உயர்ந்துள்ளது. இருப்பினும், எரிபொருள் விலையை கட்டுப்படுத்த அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது என்றார்.