புத்தளம் – முந்தல் பொது நூலகத்திலிருந்த ஒரு இலட்சத்துக்கும் அதிக பெறுமதியான பொருட்கள் திருட்டு

Tamil News large 2417502
Tamil News large 2417502


புத்தளம் – முந்தல் பொது நூலகத்திலிருந்த சுமார் ஒரு இலட்சத்துக்கும் அதிக பெறுமதியான பொருட்கள் திருடப்பட்டுள்ளன.

புத்தளம் பிரதேச சபையின் கீழ் இயங்கும் முந்தல் பொது நூலகத்தின் பின் கதவு இனந்தெரியாதோரால் உடைக்கப்பட்டு அதிலிருந்த பொருட்கள் திருடப்பட்டுள்ளன.

இந்த சம்பவம் நேற்று (22) இடம்பெற்றுள்ளது.

சம்பவம் தொடர்பில் முந்தல் காவல் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

இதனையடுத்து, முந்தல் காவல்துறையினர் மற்றும் குற்றப்புலனாய்வு பிரிவினர் இணைந்து சோதனை மேற்கொண்டுள்ளனர்.

சோதனையின் போது கணினி உள்ளிட்ட பொருட்கள் களவாடப்பட்டுள்ளமை தெரியவந்துள்ளது.

சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரனைகளை முந்தல் காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.