யாழ் எழுதுமட்டுவாள் பகுதியில் விபத்து!

FB IMG 1614059186802 720x450 1
FB IMG 1614059186802 720x450 1

யாழ் கொடிகாமம் காவல்துறை பிரிவிற்குட்பட்ட எழுதுமட்டுவாள் பகுதியில் பார ஊர்தி ஒன்று விபத்து.

குறித்த விபத்து சம்பவம் இன்று (செவ்வாய்க்கிழமை) காலை 9 மணியளவில் இடம்பெற்றுள்ளது.

யாழ் நோக்கி பயணித்த இரு வாகனங்கள் மோதிக்கொண்டதில் குறித்த விபத்து இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

முன்னே பயணித்த உழவு இயந்திரம் சடுதியாக நிறுத்த முயற்சிக்கப்பட்டமையால் அதன் பின்னால் பயணித்த பார ஊர்தி மோதியுள்ளது.

இதன்போது வாகனம் தடம்புரண்டுள்ளது. எனினும் குறித்த விபத்தில் பாரிய சேதங்கள் ஏதும் ஏற்படவில்லை என காவல்துறையினர் குறிப்பிட்டுள்ளனர்.விபத்து தொடர்பான விசாரணைகளை கொடிகாமம் காவல்துறையினர் முன்னெடுத்து வருகின்றனர்.