13.5 மில்லியன் தடுப்பூசிகளை இறக்குமதி செய்ய அமைச்சரவை அனுமதி

164557 corona vaccine
164557 corona vaccine

13.5 மில்லியன் கொரோனா தடுப்பூசிகளை இந்தியாவிலிருந்தும், பிரித்தானியாவிலிருந்தும் கொள்வனவு செய்வதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.

அரச மருந்தாக்கல் கூட்டுத்தாபனத்தின் கீழ் தடுப்பூசிகள் கொள்வனவு செய்யப்படவுள்ளன.

இந்தியாவிடமிருந்து நேரடி விலை மனு கோரலின் அடிப்படையில் தடுப்பூசிகள் கொள்வனவு செய்யப்படவுள்ளன.

உடன்படிக்கையினூடாக பிரித்தானியாவிடமிருந்து தடுப்பூசிகளைக் கொள்வனவு செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.

கொவக்ஸ் திட்டத்தின் கீழ் தடுப்பூசிகளைக் கொள்வனவு செய்யும் பொருட்டு தர நியம இழப்பீடு ஒப்பந்தத்தில் கைச்சாத்திடவும் அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.

பதில் சுகாதார அமைச்சர் பேராசிரியர் சன்ன ஜயசுமன இதற்கான அமைச்சரவை பத்திரத்தை தாக்கல் செய்திருந்தார்.