பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் இலங்கையை வந்தடைந்தார்

images 3 2
images 3 2

பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் இரண்டு நாட்கள் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு சற்று முன் இலங்கையை வந்தடைந்தார்.

கட்டுநாயக்க விமான நியைத்தை வந்தடைந்த பாகிஸ்தான் பிரதமருக்கு இலங்கை பிரதமர் மஹிந்த ராஜபக்க்ஷ தலைமையில் வரவேற்பளிக்கப்பட்டது.

பாகிஸ்தான் வெளியுறவுகள் அமைச்சர் மக்தூம் ஷா மெஹ்மூத் குரேஷி, பிரதமரின் வணிக ஆலோசகர் அப்துல் ரசாக் தாவூத், வெளிவிவகார செயலாளர் சொஹைல் மெஹ்மூத் மற்றும் பாகிஸ்தான் அரசாங்கத்தின் சிரேஷ்ட அதிகாரிகளும் இலங்கைக்கான விஜயத்தில் இணைந்துக் கொண்டுள்ளதுடன் பரஸ்பர நன்மை பயக்கும் இருதரப்பு புரிந்துணர்வு ஒப்பந்தங்களிலும் கைச்சாத்திடவுள்ளனர்.

இதேவேளை இன்று பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவை பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் சந்தித்து கலந்துரையாடவுள்ளமை குறிப்பிடத்தக்கது.