சி.வி.விக்னேஸ்வரனுக்கும் – இந்திய உயர்ஸ்தானிகருக்கும் இடையில் சந்திப்பு

Wiggy
Wiggy

தமிழ்மக்கள் தேசியகூட்டணியின் தலைவரும் வடமாகாணசபை முன்னாள் முதல்வருமான சி.வி.விக்னேஸ்வரனுக்கும் இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லேவுக்கும் இடையில் சந்திப்பொன்று இடம்பெற்றது.

இந்த சந்திப்பின்போது இந்திய-இலங்கை உறவு குறித்து கலந்துரையாடப்பட்டது.

வடமாகாணம் உட்பட இலங்கையின் முன்னேற்றம் மற்றும் அபிவிருத்தி மீதான இந்தியாவின் உறுதிப்பாட்டை இந்திய உயர்ஸ்தானிகர் வெளிப்படுத்தினார்.