மீண்டும் கடமைக்கு திரும்பிய சுகாதார அமைச்சர்!

625.500.560.350.160.300.053.800.900.160.90 2021 02 23T184227.458
625.500.560.350.160.300.053.800.900.160.90 2021 02 23T184227.458

கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகி பூரண குணமடைந்த சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாரச்சி இன்று தனது சேவையின் நிமித்தம் அமைச்சிற்கு சமுகமளித்துள்ளார்.

இதன்போது சுகாதார அமைச்சர் மற்றும் அமைச்சின் அதிகாரிகளுக்கிடையில் கொரோனா வைரஸ் தடுப்பு தொடர்பில் எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் தொடர்பில் கலந்துரையாடலொன்று நடைபெற்றுள்ளது.

தற்போது மேற்கொள்ளப்பட்டுவரும் தடுப்பூசி வழங்கும் நடவடிக்கைள் மற்றும் பி.சி.ஆர். பரிசோதனைகள் தொடர்பிலும் அமைச்சரின் கவனம் செலுத்தப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.