சுகாதார விதிமுறைகளை மீறியமை தொடர்பாக இதுவரையில் 3200 பேருக்கும் அதிகமானோர் கைது!

202012021925346718 Tamil News Tamil News Sulur near cell phone theft arrest SECVPF
202012021925346718 Tamil News Tamil News Sulur near cell phone theft arrest SECVPF

சுகாதார விதிமுறைகளை மீறியமை தொடர்பாக நேற்றையதினம் 22 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை ஊடக பேச்சாளரும் பிரதி காவல்துறை மா அதிபருமான அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில், இவ்வாறு கைது செய்யப்பட்டவர்களில் 18 பேர் ஒரே விடுதியில் தங்கியிருந்தவர்கள் என்றும் தெரிவித்துள்ளார்.

அத்துடன் சுகாதார விதிமுறைகளை மீறியமை தொடர்பாக இதுவரையில் நாட்டில் 3200 பேருக்கும் அதிகமானோர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.