முதலில் நாட்டில் மனித உரிமைகளை பாதுகாக்க வேண்டும்-சந்திரசேகர்!

07b49fa0 ab05250c e4bd1bed jvp 850x460 acf cropped 850x460 acf cropped
07b49fa0 ab05250c e4bd1bed jvp 850x460 acf cropped 850x460 acf cropped

இலங்கை அரசாங்கம் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவைக்கு பதில் அளிக்க வேண்டும் என்றால் முதலில் நாட்டில் மனித உரிமைகளை பாதுகாக்க வேண்டும் என மக்கள் விடுதலை முன்னணியின் மத்திய குழு உறுப்பினர் இ.சந்திரசேகர் தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணத்தில் உள்ள மக்கள் விடுதலை முன்னணியின் அலுவலத்தில் இன்றையதினம் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே இ.சந்திரசேகர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அத்தோடு கடந்த 12 வருடங்களாக மக்களுடைய உரிமைகளை மறுதலிக்கின்ற அரசாங்கத்தின் செயற்பாடுகளுக்கு எதிராகவே பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரையான போராட்டத்தில் அதிகமான மக்கள் கலந்து கொண்டிருந்தார்கள் என இ.சந்திரசேகர் மேலும் தெரிவித்துள்ளார்.

மறுபக்கத்தில் பல வருடங்களாக கீரியும் பாம்புமாக இருந்த முஸ்லிம் மக்களும் தமிழ் மக்களும் தற்போது ஒன்றினைந்து அரசாங்கத்துக்கு எதிராக போராட்டங்களை முன்னெடுத்து வருவதாக தெரிவித்துள்ள இ.சந்திரசேகர், எதிர்வரும் காலத்தில் தொய்வேந்திரமுணை தொடக்கம் பருத்தித்துறை வரையான போராட்டத்தை நடத்தவேண்டிய தேவை ஏற்பட்டுள்ளதாக மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.