ஏப்ரல் 21 தாக்குதல்:ஜனாதிபதி ஆணைக்குழுவின் இறுதி அறிக்கையை நிராகரிப்பதற்கு சுதந்திரக் கட்சி தீர்மானம்!

download 3 15
download 3 15

ஏப்ரல் 21 தாக்குதல் தொடர்பில் ஆய்வுகளை மேற்கொண்ட ஜனாதிபதி ஆணைக்குழுவின் இறுதி அறிக்கையை நிராகரிப்பதற்கு ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் நிறைவேற்று குழு கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

நாடாளுமன்ற உறுப்பினர் சாந்த பண்டார இதனை செய்தி பிரிவுக்கு குறிப்பிட்டார்.

இதேவேளை, ஸ்ரீ லங்கா சுதந்திரக்கட்சியின் தலைவராக முன்னாள் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவும் செயலாளராக தயாசிறி ஜயசேகரவும் மீள நியமிக்கப்பட்டுள்ளனர்.

ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் நிறைவேற்று குழு கூட்டம் அதன் தலைவர் முன்னாள் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தலைமையில் கொழும்பில் நேற்று இடம்பெற்றது.

இந்த கூட்டத்திலேயே அவர்களை தலைவர் மற்றும் செயலாளராக நியமிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அத்துடன் கட்சியின் சிரேஷ்ட உப தலைவர்கள் மூவரும் அதே பதவியில் அங்கம் வகிப்பார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய நிமல் சிறிபால டி சில்வா, மஹிந்த அமரவீர மற்றும் பேராசிரியர் ரோஹன லக்ஷ்மன் பியதாஸ ஆகியோர் குறித்த பதவிக்கு மீள பெயரிடப்பட்டுள்ளனர்.

அத்துடன் பொருளாளராக மீண்டும் இராஜாங்க அமைச்சர் லசந்த அழகியவன்ன தெரிவு செய்யப்பட்டுள்ளதோடு கட்சியின் தேசிய அமைப்பாளராக துமிந்த திஸாநாயக்க நியமிக்கப்பட்டுள்ளார்.