போதைப்பொருள் வர்த்தகத்துடன் தொடர்புடைய 61,550 பேர் கைது

kaithu

நாட்டில் கடந்த ஆண்டு முன்னெடுக்கப்பட்ட போதைப் பொருள் சுற்றிவளைப்புக்களில் 61 ஆயிரத்து 550 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

காவற்துறை பேச்சாளர் பிரதி காவற்துறை மா அதிபர் அஜித் ரோஹண இதனை தெரிவித்துள்ளார்.

கொழும்பில் நேற்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் வைத்து அவர் இதனை கூறியுள்ளார்.

கடந்த ஆண்டு மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்புகளின் போது ஆயிரத்து 610 கிலோகிராம் ஹெரோயின் போதை பொருள் கைப்பற்றப்பட்டுள்ளது.

அத்துடன் ஹெரோயின் போதை பொருளுடன் தொடர்புடைய குற்றச்சாட்டில் 33 ஆயிரத்து 125 பேர் கைது செய்யப்பட்டனர்.

மேலும் போதை பொருள் வர்த்தகர்கள் 24 பேருக்கு எதிராக சிவப்பு எச்சரிக்கை பிறப்பிக்கப்பட்டுள்ளதாகவும் காவற்துறை பேச்சாளர் பிரதி காவற்துறை மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.