சட்டத்துறை மாணவனை தாக்கிய காவல்த்துறை அதிகாரிகளை பணிநீக்க அறிவுறுத்தல்

download 1 20
download 1 20

பேலியகொடை காவல் நிலையத்தில் சட்டத்துறை மாணவர் ஒருவர் தாக்கப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய காவல்த்துறை அதிகாரிகளை பணிநீக்கம் செய்யுமாறு காவல்த்துறைமா அதிபருக்கு பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர அறிவுறுத்தியுள்ளார்.

அத்துடன், காவல் நிலையங்களில் இதுபோன்ற சம்பவங்கள் இடம்பெறுவதை ஒருபோதும் அனுமதிக்க முடியாது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

மேலும், இந்த சம்பவம் குறித்து விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர தெரிவித்துள்ளார்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர் ஒருவரை பார்வையிடுவதற்காக நேற்று பேலியகொடை காவல் நிலையத்திற்குச் சென்ற சட்டத்துறை மாணவர் ஒருவர் காவல்த்துறையினரினால் தாக்கப்பட்டு ராகமை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இந்த நிலையில், சட்டத்துறை மாணவர் காவல்த்துறையினரினால் தாக்கப்பட்ட சம்பவத்தை தாம் வன்மையாக கண்டிப்பதாக நீதி அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார்.

அத்துடன், குறித்த விடயம் சட்டத்தினடிப்படையில் வலுவாக கையாளப்பட வேண்டுமெனவும் அவர் தெரிவித்துள்ளார்.

மேலும், வழக்கறிஞர்களின் உரிமைகள் உறுதிப்படுத்தப்பட்டு பாதுகாக்கப்பட வேண்டுமெனவும் நீதி அமைச்சர் வலியுறுத்தியுள்ளார்.

அத்துடன், இந்த சம்பவத்துடன் தொடர்பில் பக்கசார்பற்ற மற்றும் சுயாதீனமான விசாரணை முன்னெடுக்கப்படுமென தாம் நம்புவதாகவும் நீதி அமைச்சர் அலி சப்ரி மேலும் தெரிவித்துள்ளார்.