க.பொ.த. சாதாரண தர பரீட்சை நாளை மறுதினம் ஆரம்பம்!

41335aeab28af488c20e033db71edf59 XL
41335aeab28af488c20e033db71edf59 XL

கொவிட்-19 சுகாதார வழிகாட்டுதல்ளைப் பின்பற்றி எதிர்வரும் திங்கட்கிழமை க.பொ.த சாதாரண தர பரீட்சை ஆரம்பமாகவுள்ளது.

பரீட்சைக்கு அமரும் எந்தவொரு மாணவரேனும் கொவிட்-19 வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளமை கண்டறியப்பட்டால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஒவ்வொரு மாவட்டத்திலும் குறைந்தது இரண்டு சிறப்பு பரீட்சை நிலையங்களை அமைக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

மேலும் சம்பந்தப்பட்ட பகுதிகளிலுள்ள பொதுச்சுகாதார பரிசோதகர்கள், மருத்துவ அதிகாரிகள் மற்றும் பிற சுகாதார அதிகாரிகளுடன் கலந்தாலோசித்து மாணவர்களின் ஆரோக்கியத்தை உறுதிப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கல்வியமைச்சர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார்.

மார்ச் 1 முதல் 10 வரை நடைபெறும் க.பொ.த சாதாரணதர பரீட்சையில் மொத்தம் 622,352 பேர் பரீட்சைக்கு அமரவுள்ளனர். இதில் 423,746 பாடசாலைப் பரீட்சார்த் திகளும் 198,606 தனியார் பரீட்சார்த்திகளும் அடங்குவர்.

இப்பரீட்சை 4513 பரீட்சை நிலையங்களிலும் 542 ஒருங்கிணைப்பு நிலையங்களிலும் நடத்தப்படும்.

இதனிடையே கல்வி அமைச்சின் வேண்டுகோளின் பேரில் பரீட்சைக் காலத்தில் ரயில்வே மற்றும் வீதிப் பயணிகள் போக்குவரத்து அதிகாரசபை ஆகியன மாணவர்களின் வசதி கருதி சிறப்பு போக்குவரத்து ஏற்பாடுகளைச் செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.