வவுனியாவில் உள்ளூர் உற்பத்தியை ஊக்குவிக்கும் செயற்திட்டம் ஆரம்பித்து வைப்பு

apeal farm 3
apeal farm 3

அரசின் வறுமை ஒழிப்பு செயற்த்திட்டத்திற்கமைய உள்ளூர் உற்பத்தியை ஊக்குவிக்கும் நோக்குடன் அறிமுகப்படுத்தப்பட்ட சௌபாக்கியா உற்பத்தி கிராம நிகழ்ச்சித்திட்ட ஆரம்பநிகழ்வு வவுனியா மணிபுரம் கிராமத்தில் இன்று (03) இடம்பெற்றது.

நிகழ்வில் முதன்மை அதிதியாக கலந்து கொண்ட நாடாளுமன்ற உறுப்பினரும், மாவட்ட ஒருங்கிணைப்பு குழு தலைவருமான கு.திலீபன், நிகழ்வை உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைத்தார்.

குறித்த திட்டத்தின் கீழ் வவுனியாவில் 10 கிராமங்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளதுடன், ஒவ்வொரு கிராமத்திற்கும் 15 இலட்சம் ரூபாய்நிதி ஒதுக்கப்பட்டு திட்டம் செயற்படுத்தப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

நிகழ்வில் மேலதிக அரச அதிபர், தி.திரேஸ்குமார், பிரதேச செயலாளர் நா.கமலதாசன் மற்றும் நிகழ்சி திட்டப்பணிப்பாளர் பொதுமக்கள், பயனாளர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.