கல்வி செயற்பாட்டுக்கு மாணவர்களுக்கு துவிச்சக்கர வண்டிகள் வழங்கி வைப்பு!

IMG 5cb1d4ccba40a45900d6f652f68246b8 V
IMG 5cb1d4ccba40a45900d6f652f68246b8 V

வன்னி பகுதியில் கல்வி செயற்பாட்டு நடவடிக்கைகளுக்காக மாணவர்களுக்கு துவிச்சக்கர வண்டிகள் நீம் நிறுவனத்தின் ஏற்பாட்டில் வவுனியாவில் இன்று (03) வழங்கி வைக்கப்பட்டது.

என்பீல்ட் நாகபூசணி அம்பாள் ஆலய மனிதநேய பணிகள் அமைப்பான ‘தாயக நிழல்’ அமைப்பின் நிதி அனுசரணையுடன் நீம் நிறுவனத்தின் செயலாளர் க. சுவர்ணராஜா தலைமையில் வன்னி பகுதியை சேர்ந்த மாணவர்களுக்கு ஐந்து துவிச்சக்கர வண்டிகள் வழங்கி வைக்கப்பட்டது.

வவுனியா இரண்டாம் குறுக்குத்தெருவில் அமைந்துள்ள தனியார் விருந்தினர் விடுதி ஒன்றில் நடைபெற்ற இந்நிகழ்வில் பிரதம விருந்தினராக உதவி பிரதேச செயலாளர் திருமதி. பிரியதர்சினி கலந்து கொண்டிருந்தார். மாணவர்களுக்கு கல்வி செயற்பாட்டுக்கான துவிச்சக்கர வண்டிகள் அதிதிகளால் வழங்கி வைக்கப்பட்டது.

நிகழ்வில் சிறப்பு விருந்தினர்களாக அண்மைய பாடசாலை சிறந்த பாடசாலை செயல்திட்ட பொறியிலாளர் வாசுதேவன், இறக்கை கல்விசார் தன்னார்வ அமைப்பின் தலைவர் நிமலன் ,வவுனியா பிரதேச செயலக நிதி உதவியாளர் ஜெயரட்ணம், காணி உத்தியோகத்தர் வசந்தன் ஆகியோர் கலந்து சிறப்பித்தனர்.

கிளிநொச்சி, முல்லைத்தீவு, வவுனியா மற்றும் மன்னார் மாவட்டத்தைச் சேர்ந்த மாணவர்கள் துவிச்சக்கர வண்டிகளை பெற்றுக் கொண்டனர்.