மகா சிவராத்திரி விழா பூஜை வழிபாட்டிற்கு ஆலயத்திற்கு பக்தர்கள் வருவதை தவிர்க்குமாறு வேண்டுகோள்!

thari
thari

மட்டக்களப்பு – கொக்கட்டிச்சோலை தான்தோன்றீஸ்வரர் ஆலயத்தில் எதிர்வரும் 11 ம் திகதி இடம்பெறவுள்ள மகா சிவராத்திரி விழா பூஜை வழிபாட்டில் நாட்டில் ஏற்பட்டுள்ள கொரோனா தொற்று காரணமாக பூஜை நேரடியாக ஓளிபரப்பப்படும் எனவே பக்தர்கள் ஆலையத்திற்கு வருவதை தவிர்த்து கொள்ளுமாறும் வீட்டில் இருந்து வழிபாடுகளில் ஈடுபடுமாறும் ஆலய பரிபாலனசபை செயலாளர் பக்த அடியார்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

மட்டக்களப்பு பாஸர் வீதியிலுள்ள கிழக்கு ஊடக மன்றத்தில் இன்று புதன்கிழமை (03) மாலை இடம்பெற்ற ஊடக சந்திப்பில் அவர் இவ்வாறு வேண்டுகோள் விடுத்துள்ளார்.

வரலாற்று சிறப்பு மிக்க இந்த ஆலயத்தில் வருடா வருடம் இடம்பெறும் மகா சிவராத்திரி பூஜை வழிபாட்டிற்கு பிற மாவட்டங்களில் இருந்து இலட்சக்கணக்கான பக்தர்கள் எம்பெருமனை வந்து தரிசித்துச் செல்வது வழமை.

இருந்தபோதும் தற்போது ஏற்பட்டுள்ள கொரோனா தொற்று காரணமாக மகா சிவராத்திரி பூஜை விழிபாட்டில் பக்தர்கள் கலந்துகொள்ள முடியாத சூழ்நிலைக்கு இந்தவருடம் ஆளாகியுள்ளோம்.

எனவே இந்த ஆண்டு இடம்பெறம் மகா சிவராத்திரி பூஜை வழிபாடுகளை ஊடகங்கள் ஊடாக நேரடியாக ஓளிபரப்பு செய்யவுள்ளோம். எனவே மட்டக்களப்பு மாவட்ட மக்கள் உட்பட பிற மாவட்டங்களைச் சேர்ந்த பக்த அடியார்கள் ஆலையத்துக்கு வருவதை தவிர்த்து வீட்டில் இருந்து வழிபாடு செய்யுமாறும் எங்களையும் பாதுகாத்து பிறரையும் பாதுகாக்க முழுமையான ஓத்துழைப்பை வழங்க வேண்டும் என ஆலைய பரிபாலனசபை பக்த அடியார்களை மிகவும் பணிவுடன் கேட்டுக்கொள்வதாக வேண்டுகோள் விடுத்துள்ளனர்.