இராஜாங்க அமைச்சர் அருந்திக பெர்ணாண்டோ யாழ்ப்பாணத்திற்கு விஐயம்

Arundika
Arundika


யாழ்ப்பாணத்திற்கு விஐயம் செய்த தென்னை, கித்துல், பனை மற்றும் இறப்பர் செய்கை மேம்பாடு மற்றும் அவை சார்ந்த கைத்தொழில் பண்டங்கள் உற்பத்தி மற்றும் ஏற்றுமதி பல்வகைப்படுத்தல் இராஜாங்க அமைச்சர் அருந்திக பெர்ணாண்டோ அவர்கள் கைதடியில் அமைந்துள்ள பனை மற்றும் தென்னை கூட்டுறவு சங்க அலுவலகத்திற்கு விஜயத்தினை மேற்கொண்டு அங்குள்ள குறைபாடுகள் தொடர்பாக கேட்டறிந்து அலுவலகத்தினை பார்வையிட்டார்.

இதேவேளை தும்பு உற்பத்தி தொடர்பான தொழிற்சாலை அமைத்து தருமாறு ஊழியர்களின் கோரிக்கையை ஏற்றுக்கொண்ட அமைச்சர் அதனை இந்தியாவிலிருந்து பெற்றுத் தருவதாக உறுதிமொழி அளித்தார் அத்துடன் வெளிநாட்டிலிருந்து இறக்குமதி செய்யப்படும் உற்பத்திகளுக்கு வரிகளை அதிகரிப்பதன் மூலம் உள்நாட்டு உற்பத்தியை ஊக்குவிக்க முடியும் என அமைச்சர் ஆலோசனை வழங்கினார். இதேவேளை இலங்கை முழுவதும் 13 சதவீதமான தென்னைகள் காணப்பட்ட போதும் அதில் மூன்று விதமான தென்னை உற்பத்தியில் இருந்து பயன்களை பெற முடிகிறது எனவும் இளைஞர்கள் முயற்சி செய்தால் தென்னை பனை சார் உற்பத்திப் இருந்து அதிக பயனைப் பெற முடியும் எனவும் மேலும் அமைச்சர் அவர்கள் குறிப்பிட்டார்.

இந்நிகழ்வில் யாழ் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமாகிய அங்கஜன் ராமநாதன் யாழ் மாவட்ட அரச அதிபர் கணபதிப்பிள்ளை மகேசன் வடமாகாண பனை அபிவிருத்தி சபையின் தலைவர் தலைவர் உட்பட பலர் கலந்து கொண்டார்கள்.