நீதிப்பேராணை மனு மீதான ஆராய்வு எதிர்வரும் 31 ஆம் திகதி வரை ஒத்தி வைப்பு

image 362b80034d
image 362b80034d

ஏப்ரல் 21 பயங்கரவாத தாக்குதல் காலப்பகுதியில் நாட்டிற்கு 6000 வாள்கள் கொண்டு வரப்பட்ட சம்பவம் தொடர்பில் பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை தாக்கல் செய்த நீதிப்பேராணை மனு மீதான ஆராய்வு எதிர்வரும் 31 ஆம் திகதி வரை ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

குறித்த மனு இன்றைய தினம் மேன்முறையீட்டு நீதிமன்ற தவிசாளர் அர்ஜூன ஒபேசேகர மற்றும் மாயாதுன்னே கொரயா ஆகிய நீதியரசர்கள் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்து கொள்ளப்பட்டது.

இந்த விடயம் தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட விசாரனைகளின் நிலவரம் என்னவென பாதுகாப்பு செயலாளர் மற்றும் காவற்துறைமா அதிபரிடம் வினவி நீதிமன்றில் சமர்பனங்களை முன்வைக்க அனுமதியளிக்குமாறு சட்டமா அதிபர் சார்பில் முன்னிலையான அரச சிரேஷ்ட சட்டத்தரணி அவந்தி பெரேரா இதன்போது தெரிவித்துள்ளார்.

இன்றைய விசாரணையின் போது, பேராயர் சார்பில் நீதிமன்றில் முன்னிலையான ஜனாதிபதி சட்டத்தரணி சஞ்ஜீவ ஜயவர்த்தன, சமர்பனங்களை முன்வைத்ததாக எமது நீதிமன்ற செய்தி தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.

இதன்படி மனுமீதான ஆராய்வு எதிர்வரும் 31 ஆம் திகதி வரை ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.