காவல்துறை விசேட அதிரடிப்படையினரால் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது 24,600 கிலோ கழிவு தேயிலை மீட்பு!

864146893tea
864146893tea

காவல்துறை விசேட அதிரடிப்படையினரால் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது 24,600 கிலோ கழிவு தேயிலை கைப்பற்றப்பட்டுள்ளது.

கொனஹேன முகாமின் அதிகாரிகளுக்கு கிடைத்த தகவல்களுக்கமைய உஸ்வெட்டகெலியாவ மற்றும் ஏக்கல பிரதேசங்களில் இந்த சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது.

அதன்போது ஏக்கல கொட்டுகொட பிரதேசத்தில் களஞ்சிய சாலையில் காணப்பட்ட 3900 கிலோ தேயிலை மற்றும் அலுத் அக்கரே பிரதேசத்தில் 20,700 கிலோ கழிவுத் தேயிலையும் கைப்பற்றப்பட்டுள்ளது.

களஞ்சிய சாலையின் உரிமையாளர் உட்பட 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.