ஆணைக்குழு அமைப்பதில் நம்பிக்கையில்லை

sakthivel
sakthivel

அரசியல் கைதிகள் விடுதலை செய்வது தொடர்பாக ஆராய்வதற்கு ஆணைக்குழு அமைப்பது காலத்தை இழுத்தடிக்கின்ற ஒரு செயலாகவே தாம் கருதுவதாக அரசியல் கைதிகளை விடுதலை செய்வதற்கான தேசிய அமைப்பின் இணைப்பாளர் அருட்தந்தை சக்திவேல் தெரிவித்துள்ளார்.

அரசியல் கைதிகள் விடுதலை தொடர்பில் தெற்கின் பெரும்பாலான சிங்கள சமூகம் ஏற்றுக்கொள்ளாத ஒரு சூழ்நிலையில் தற்போது அரசியல் கைதிகள் விடுதலை செய்யப்பட வேண்டும் அவர்களின் விடுதலை தொடர்பாக ஆராய்வதற்கு ஆணைக்குழு ஒன்றை நியமிக்க வேண்டும் எனவும் ஞானசார தேரர் கூறியுள்ளார்.

இக்கருத்தினை வரவேற்றுள்ள அருட்தந்தை அரசியல் கைதிகள் விடயத்தினை அரசியல் விடயமாக பார்க்க வேண்டுமே தவிர அதனை பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் பார்க்க கூடாது எனவும், கடந்த காலங்களில் அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பில் ஆணைக்குழுஅக்கள் அமைக்கப்பட்டு அவர்களின் பரிந்துரைகள் எதனையும் கடந்த கால அரசு ஏற்றுக்கொள்ளவில்லை.

எனவே அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பில் அமைக்கப்படுகின்ற ஆணைக்குழுக்கள் செயற்பாடுகள் காலத்தை இழுத்தடிக்கின்ற ஒரு செயல் என தெரிவித்துள்ளார்.