முல்லைத்தீவு மாவட்டத்தில் 66 மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கிய விதையனைத்தும் விருட்சமே குழுவினர்!

received 156019036379209
received 156019036379209

கருகம்பனை இந்து இளைஞர் கழகமும் சித்திரமேழி பழனியானந்தன் சனசமூக நிலையமும் இணைந்து முன்னெடுக்கும் விதையனைத்தும் விருட்சமே செயற்திட்டத்தின் கீழ் முல்லைத்தீவு மாவட்டத்தின் புதுக்குடியிருப்பு, கரைதுறைப்பற்று ஆகிய பிரதேச செயலகப் பிரிவுகளில் தெரிவு செய்யப்பட்ட 66 பாடசாலை மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டது

கருகம்பனை இந்து இளைஞர் கழகமும் சித்திரமேழி பழனியானந்தன் சனசமூக நிலையமும் இணைந்து முன்னெடுக்கும் விதையனைத்தும் விருட்சமே செயற்திட்டமானது வடக்கு கிழக்கில் மாணவர்களின் கல்வி நடவடிக்கைகளை மேம்படுத்தும் நோக்கில் வருடம் தோறும் அதிஸ்ரலாப சீட்டிழுப்புக்களை நடத்தி அதில் வரும் பணத்தில் மாணவர்களுக்கான கற்றல் உபகரணங்கள் வழங்கும் செயற்றிட்டத்தை முன்னெடுத்து வருகிறது.

அந்தவகையில் 2020 ம் ஆண்டு முன்னெடுக்கப்பட்ட அதிஸ்ரலாப சீட்டிழுப்பின் ஊடாக சேர்க்கப்பட்ட பணத்தைக் கொண்டு இம்முறையும் யாழ்ப்பாணம், மன்னார், முல்லைத்தீவு, கிளிநொச்சி, மட்டக்களப்பு மாவட்டத்தில் 1000 மாணவர்களை இலக்காக கொண்டு குறித்த செயற்றிட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

அந்தவகையில் முல்லைத்தீவு மாணவர்களின் விசேட கோரிக்கைக்கு அமைவாக துணுக்காய் பிரதேச செயலகப் பிரிவில் 20 மாணவர்களுக்கும் மாந்தை கிழக்கு பிரதேச செயலகப் பிரிவில் 15 மாணவர்களுக்கும் ஒட்டுசுட்டான் பிரதேச செயலகப் பிரிவில் 37 மாணவர்களுக்குமாக 72 மாணவர்களுக்கு புத்தகப்பை கற்றல் உபகரணங்கள் காலணிகள் உள்ளடங்கலாக ஒரு மாணவருக்கு தலா 3500 ரூபா பெறுமதியான கற்றல் உபகரணங்கள் ஏற்கனவே வழங்கி வைக்கப்பட்ட நிலையில், முல்லைத்தீவு மாவட்டத்தின் புதுக்குடியிருப்பு, கரைதுறைப்பற்று ஆகிய பிரதேச செயலகப் பிரிவுகளில் தெரிவு செய்யப்பட்ட 66 பாடசாலை மாணவர்களுக்கு ஒரு மாணவருக்கு தலா 3500 ரூபா பெறுமதியான கற்றல் உபகரணங்கள் நேற்று வழங்கி வைக்கப்பட்டது

முல்லைத்தீவு மாவட்டத்தின் புதுக்குடியிருப்பு பிரதேச செயலகப் பிரிவில் தெரிவுசெய்யப்பட்ட 19 மாணவர்களுக்கான கற்றல் உபகரணம் வழங்கும் நிகழ்வு புதுக்குடியிருப்பு பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்றது அதனை தொடர்ந்து கரைதுறைப்பற்று பிரதேச செயலகப் பிரிவில் தெரிவுசெய்யப்பட்ட 47 மாணவர்களுக்கான கற்றல் உபகரணம் வழங்கும் நிகழ்வு கரைதுறைப்பற்று பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்றது.

நிகழ்வில் முல்லைத்தீவு மாவட்ட அரசாங்க அதிபர் க.விமலநாதன் முல்லைத்தீவு மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் க.கனகேஸ்வரன் புதுக்குடியிருப்பு பிரதேச செயலாளர் தி.ஜெயகாந்த் கரைதுறைப்பற்று பிரதேச செயலாளர் ம.உமாமகள் அரச அதிகாரிகள் விதையனைத்தும் விருட்சமே குழுவினர் உள்ளிட்டவர்கள் மாணவர்களுக்கான கற்றல் உபகரணங்களை வழங்கி வைத்தனர்.