எண்ணைய் இறக்குமதியாளர்களுக்கு சுங்கத் திணைக்களம் எச்சரிக்கை

download 2 25
download 2 25

தீங்கு விளைவிக்கக்கூடிய உட்பொருட்களைக் கொண்ட தேங்காய் எண்ணெயை இறக்குமதி செய்வதற்கு பொறுப்பான நபர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என, எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

கொழும்பில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துரைத்த, சுங்கத் திணைக்களத்தின் பணிப்பாளர் ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் விஜித ரவிபிரிய இதனை தெரிவித்துள்ளார்.

அத்துடன், அப்லாரொக்சின் என்ற இரசாயனப் பதார்த்தம் தேங்காய் எண்ணெயில் மட்டுமல்லாது, மிளகாய்த்தூள் உள்ளிட்ட பல்வேறு உணவுப் பொருட்களிலும் அடையாளங் காணப்பட்டுள்ளதாக, அவர் கூறியுள்ளார்.

இதற்கமைய, சீனி, பால் மா, கிழங்கு மற்றும் வெங்காயம் ஆகிய உணவுப் பொருட்களிலும், அப்லாரொக்சின் என்ற இரசாயனப் பதார்த்தம் கண்டறியப்பட்டுள்ளதாக, சுங்கத் திணைக்களத்தின் பணிப்பாளர் ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் விஜித ரவிபிரிய தெரிவித்துள்ளார்.

மேலும், இந்த அனைத்து பொருட்களும் சுங்கத் திணைக்களத்தின் முழுமையான ஆய்வுக்கு பின்னரே சந்தைக்கு வழங்கப்படுவதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

அத்துடன், சர்ச்சைக்குரிய தேங்காய் எண்ணெயை மீள ஏற்றுமதி செய்ய உத்தரவிடப்பட்டுள்ளதாகவும், அவர் கூறியுள்ளார்.

மேலும், இறக்குமதி செய்யப்பட்ட அதே அளவு தேங்காய் எண்ணெய் மீண்டும் ஏற்றுமதி செய்யப்படும் எனவும், அவர் இதன்போது தெரிவித்தார்.