ஸ்ரீ கைலாயப்பிள்ளையார் முத்துமாரியம்மன் ஆலயத்தில் எண்ணைக்காப்பு

12
12

கிழக்கு மாகாணத்தின் பிரசித்தி பெற்ற ஆலயங்களுள் மட்டக்களப்பு மாவட்டத்தின் வாழைச்சேனை பிரதேசத்தின் நூறாண்டுகள் பழமை வாய்ந்த ஆலயமான வாழைச்சேனை ஸ்ரீ கைலாயப்பிள்ளையார் முத்துமாரியம்மன் ஆலயத்தின் எண்ணைக்காப்பு சாத்தும் நிகழ்வு இன்று செவ்வாய்கிழமை நடைபெற்றது.

வாழைச்சேனை ஸ்ரீ கைலாயப்பிள்ளையார் முத்துமாரியம்மன் ஆலயத்தின் மஹா கும்பாபிஷேகத்தினை முன்னிட்டு இன்று செவ்வாய்க்கிழமை எண்ணெய்க் காப்பு சாத்தும் நிகழ்வு மிகவும் கோலாகலமாக இடம்பெற்றது.

இதன்போது மட்டக்களப்பு மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் இருந்து ஆயிரக் கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு தங்களது வேண்டுதலை வேண்டி ஆலய முலஸ்தான பிள்ளையார் உட்பட்ட அனைத்து விக்கிரகங்களுக்கும், முத்துமாரியம்மனுக்கும் எண்ணெய் காப்பு சாத்தப்பட்டது.

அத்தோடு எண்ணெய் காப்பு நிகழ்வில் கலந்து கொண்ட அனைத்து பக்த அடியார்களுக்கும் சிவ சின்னமான உருத்திராட்ச மாலை ஆலய நிருவாகத்தினரால் வழங்கி வைக்கப்பட்டது.

கும்பாபிஷேக எண்ணைய்க்காப்பு சாத்தும் பூசைகள் யாவும் தெல்லிப்பளை துர்க்காபுரம் ஸ்ரீதுர்க்கா தேவி தேவஸ்தான முதன்மை சிவாச்சாரியார் பிரம்மஸ்ரீ. சுந்தர செந்தில்ராஜா சிவாச்சாரியார் தலைமையில் நடைபெற்றது.

புதன்கிழமை மஹா கும்பாபிஷேகமும் இடம்பெறவுள்ளதுடன். அதனை தொடர்ந்து 48 நாட்கள் மண்டல பூசைகள் இடம்பெற்று எதிர்வரும் மே மாதம் 18ம் திகதி சங்காபிஷேகமும் பாற்குட பவணியும் இடம்பெறவுள்ளது.

வாழைச்சேனை ஸ்ரீ கைலாயப்பிள்ளையார் முத்துமாரியம்மன் ஆலயமானது வாழைச்சேனை பிரதேச செயலாளர் பிரிவில் நூறாண்டுகள் பழைமை வாய்ந்த ஆலயமான திகழ்ந்து வருகின்றமையால் பக்தர்கள் அதிகம் வருகை தந்துள்ளமை குறிப்பிடப்பிடத்தக்கது.

ஆலயத்தின் தொண்மை வாய்ந்த வரலாற்றுக் குறிப்பு

வாழைச்சேனை ஸ்ரீ கைலாயப்பிள்ளையார் ஆலயத்தில் விசேடமாக வெள்ளிக்கிழமைகளில் மதிய பூசையாக ஒரு பொங்கல் நடக்கும் என்று நேர்த்திக்கடன் வைத்தோர்களும் இடையிடையே பொங்கல் பூசை செய்து வந்தனர் என்றும் முன்னோர் கூறியுள்ளார். இக்காலத்தில் ஒரு அற்புதமான நிகழ்ச்சியும் இக்கோயிலில் நடந்ததாம் அதாவது “பிச்சிலான்” கணபதி என்னும் ஒரு பையன் பூசை நடைபெறும் காலங்களில் தவறாது இக்கோயிலுக்கு வந்து பிள்ளையாரை வணங்கி பொங்கல் வாங்கி சாப்பிடுவது வழக்கமாய் இருந்ததாம். தற்செயலாக ஒருநாள் பிச்சிலான் பூசைக்குப் பிந்தி விட்டான் பூசைமுடிந்து ஆட்களும் கலைந்து விட்டனர். பிச்சிலானுக்கு பொங்கல் கிடைக்கவில்லை பசியும் சலிப்பும் ஏற்பட பிச்சிலான் பிள்ளையாரைத் துக்கிக் கொண்டு போய் கோயில் முன் இருந்த ஓடைக்குள் போட்டுவிட்டுப் போய்விட்டான்

அடுத்தமுறை பொங்கல் செய்ய வந்தவர்கள் கோயிலுக்குள் பிள்ளையாரைக் கானாது எங்கும் தேடினார் பூசைக்கு நேரம் போகிறது பிள்ளையாரைக் கானவில்லை கடைசியாக அந்த ஓடையில் சலவை செய்து கொண்டிருந்த சலவைத் தொழிலாளி ஒருவரிடம் விசாரித்த போது பிச்சிலான் தான் அந்தப் பக்கம் திரிந்தான் என்றாராம் பூசைக்காரர் பிச்சிலான் போனபக்கம் ஓடையைப் போய்ப் பார்த்தபோது அதற்குள் பிள்ளையார் போடப்பட்டிருப்பதைக் கண்டு அதை எடுக்கத் துக்கிய போது முடியாத பாரமாய் இருந்ததாம் பலபேர் துக்கியும் தூக்கமுடியாது போக பின்பு பிச்சிலானை தேடிப்பிடித்துக் கூட்டி வந்து அவன் போய் தூக்கியதும் இலகுவாய் தூக்கப்பட்டதாம் அவனையே கொண்டு இருந்த இடத்தில் முன்போல் பிள்ளையாரை வைப்பித்து பொங்கலிட்டுப் பூசை முடிந்ததும் பிச்சிலானுக்கு முதலில் பொங்கல் கொடுத்து அவனை மகிழ்வித்தனராம் அன்றிலிருந்து யார் பொங்கலிட்டாலும் பிச்சிலானை மறவாது அவனுக்கு ஒரு பங்கு கொடுத்து வந்தனராம் என்று இக்கதையை அறிந்தோர் கூறினார்.