கோட்டாவை நம்பும் கூட்டமைப்புப் பிரமுகர்!

velamalithan
velamalithan

கோட்டாபய ராஜபக்ச தலைமையிலான அரசாங்கம் சொல்வதைச் செய்கின்ற அரசாங்கமாக இருக்கும் என நம்புவதாக தமிழரசுக் கட்சியின் கிளிநொச்சிப் பிரதேச சபைத் தவிசாளர் வேழமாலிதன் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.

இராணுவத்தின் பிடியில் உள்ள கிளிநொச்சி நூலகம் தொடர்பாக தமிழ்க் குரலுக்கு கருத்துத் தெரிவிக்கும்போதே வேழமாலிதன் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இராணுவத்தினர்வசம் உள்ள நூலகக் காணியானது விடுவிக்கப்படும் சாத்தியம் தொடர்பாக தமிழ்க் குரலின் முதன்மை அறிவிப்பாளர் கொற்றவை அவர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த வேழமாலிதன்,

“புதிய அரசியல் சூழ்நிலையானது மாற்றம் ஏற்படுத்தும் என நம்புகிறேன். கிளிநொச்சி மாவட்டத்தில் உள்ள சகல வாழ்வியல் பிரச்சினைகளையும், தமிழ் பேசும் மக்களின் அனைத்துப் பிரச்சினைகளையும் தீர்ப்பேன் என்று இந்த அரசாங்கம் தெரிவித்த காரணத்தால் இந்த அரசாங்கம் சொல்வதைச் செய்கின்ற அரசாங்கமாக இருக்கும் என நம்புகிறேன்” என்றார்.

கிளிநொச்சி நூலகப் பிரச்சினை தொடர்பாக கரைச்சிப் பிரதேச சபைத் தவிசாளர் உட்பட பலர் தெரிவித்த கருத்துக்ள்: