கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட மேலும் 88 பேர் அடையாளம்!

big 165616 Coronavirus 1 3
big 165616 Coronavirus 1 3

கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட மேலும் 88 பேர் இன்று அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு விடுத்துள்ள நாளாந்த புதுப்பிக்கப்பட்ட அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய இன்றைய தினம் மாத்திரம் 244 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், நாட்டில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 92,686ஆக உயர்வடைந்துள்ளது.