ஆறு மாவட்டங்களுக்கு அதிக வெப்பநிலை தொடர்பான எச்சரிக்கை!

bigstock 126075764
bigstock 126075764

ஆறு மாவட்டங்களுக்கு அதிக வெப்பநிலை தொடர்பான எச்சரிக்கையை தேசிய வளிமண்டலவியல் திணைக்களம் இன்று (01) விடுத்துள்ளது.

பொலன்னறுவ , திருகோணமலை ,மட்டக்களப்பு ,அம்பாறை , மொனராகலை மற்றும் ஹம்பாந்தோட்டை ஆகிய மாவட்டங்களில் இந்த அதிகரித்த வெப்பநிலை காணப்படும்.

அடுத்த 36 மணி நேரத்தில் நாடு முழுவதும் மழை பெய்யக்கூடிய கால நிலை இல்லை என்று வானிலை முன்னறிவிப்பில் தெரிவிக்ககப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.