எதிர்வரும் திங்கட்கிழமை இராயப்பு ஜோசப் ஆண்டகைக்கு கிளிநொச்சியில்அஞ்சலி :துக்க தினத்திற்கும் அழைப்பு !

Velamalikithan 1
Velamalikithan 1

எதிர்வரும் திங்கட்கிழமை மறைந்த இராயப்பு ஜோசப் ஆண்டகைக்கு கிளிநொச்சியில் அஞ்சலி செலுத்தும் வகையில் கறுப்பு கொடிகள் கட்டி துக்க தினமாக கடைப்பிடிக்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. 

இவ்விடயம் தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் அழைப்பு விடுத்துள்ளார். அதற்கு அமைவாக அன்றைய தினம் சேவைச்சந்தை வர்த்தகர்கள், வர்த்தக நிலையங்கள், பொது இடங்கள் அனைத்திலும் கறுப்பு கொடி கட்டி துக்க தினமாக அனுஸ்டிக்குமாறு கரைச்சி பிரதேச பை தவிசாளர் கோரிக்கை விடுத்துள்ளார்.

திங்கட்கிழமை காலை 07 மணிக்கு கிளிநொச்சி நகரில் உள்ள பசுமை பூங்காவில் விசேட அஞ்சலி கூட்டமும், நினைவேந்தல் நிகழ்வும் ஏற்பாடு செய்யப்பட்டு செய்யப்பட்டுள்ளதாகவும், குறித்த நேரத்தில் வர்த்தக நிலையங்களை மூடி அஞசலி செலுத்துமாறும் அவர் தெரிவித்தார்.

தமிழ் மக்களின் உரிமைக்குரலாகவும், தமிழ் மக்களின் துன்ப துயரங்களிற்காக குரல் கொடுத்த வந்த ஆண்டகையை மனதில் நிறுத்தி அவருக்க அஞ்சலி செலுத்தவும், அவரை நினைவுகூரவும் வேண்டிய கடப்பாடு அனைத்து தமிழ் மக்களிடமும் உள்ளது.

இந்த நிலையில் அடுத்துவரும் நாட்கள் கிறிஸ்தவர்கள் கடைப்பிடிக்கும் முக்கியமான நாட்கள் என்ற வகையில் எதிர்வரும் திங்கட்கிழமையன்று ஆண்டகைக்கு அஞ்சலிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகவும் கரைச்சி பிரதேச சபையின் தவிசாளர் அருணாசலம் வேழமாலிகிதன் தெரிவித்துள்ளார்.

அன்றைய தினம் அனைத்து வர்த்தக நிலையங்கள், பொது இடங்கள், மக்கள் கூடும் இடங்கள், முக்கியத்துவம்வாய்ந்த சந்திகள், நகர்ப்பகுதி உள்ளிட்ட அனைத்து இடங்களிலும் கறுப்பு கொடிகளை கட்டி ஆண்டகையின் பிரிவிற்கு அஞ்சலி செலுத்துமாறும், காலை 7 மணிக்கு பசுமைப்பூங்காவில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள அஞ்சலி நிகழ்விலும் பங்குகொள்ளுமாறும் அவர் அழைப்பு விடுத்துள்ளார்