உயிர்த்த ஞாயிறு தாக்குதல் – பொலிஸ் அதிகாரிகள் இன்றும் சாட்சியம்

easter attack
easter attack

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் விசாரணை செய்ய அமைக்கப்பட்டுள்ள ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவில் இன்று (Dec.13) பொலிஸ் அதிகாரிகள் பலர் சாட்சியம் வழங்கவுள்ளனர்.

அதேபோல் நேற்று (Dec.12) பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிகள் பலர் ஆணைக்குழுவில் சாட்சியம் வழங்கியிருந்தனர்.

பிரதி பொலிஸ் அத்தியட்சகர் ஆர்.எம். லஹிரு பிரதீப் உதயங்க சாட்சியமளிக்கையில் தாக்குதல் தொடர்பில் முன்கூட்டியே அறிந்திருந்தாக பொலிஸ் முறைபாட்டு புத்தகத்தில் பதிவிடுமாறு கொழும்பு வடக்கு பகுதிக்கு பொறுப்பாக இருந்த பொலிஸ் அத்தியட்சகர் சஞ்சிவ பண்டார தமக்கு அழுத்தங்களை பிரயோகித்தாக தெரிவித்தார்.

அவ்வாறு பதிவிட மறுப்பு தெரிவித்தமையால் தன்னை மோதர பொலிஸ் நிலையத்தில் இருந்து வாரியபொல பொலிஸ் நிலையத்திற்கு இடமாற்றம் செய்வதாகவும் அவர் ஆணைக்குழுவில் கூறியுள்ளார்.

இதேவேளை, கொழும்பு வடக்கு பொலிஸ் பிரிவுக்கு பொறுப்பான உதவி பொலிஸ்மா அதிபர் காரியாலயத்தின் பிரதான பொலிஸ் பரிசோதகர் எல்.எச். மஹிந்த கருணாரத்ன ஆணைக்குழுவில் இன்று (DEc.13) சாட்சியம் அளிக்கவுள்ளார்.