கம்பஹாவில் தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு

realistic coronavirus background 52683 35109
realistic coronavirus background 52683 35109

நாட்டில் நேற்று கொவிட்-19 தொற்றுறுதியான 211 பேரில் அதிகமானோர் கம்பஹா மாவட்டத்திலேயே அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

கொவிட்-19 பரவல் தடுப்பு தேசிய செயற்பாட்டு மையம் விடுத்துள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய கம்பஹா மாவட்டத்தில் 35 பேருக்கும் கொழும்பில் 32 பேருக்கும் நேற்று தொற்றுறுதியாகியுள்ளது.

அத்துடன் வெளிநாடுகளில் இருந்து வந்த 28 பேருக்கும் நேற்று தொற்றுறுதியானதாக அறிவிக்கப்பட்டுள்ளது.