யாழ்.மாநகர முதல்வர் உயிரிழப்பா? முகநூல்களில் விசமத்தனமான பதிவுகள்

manivannan 1 1
manivannan 1 1

இணையவழியில் அதிகரித்துள்ள குற்றச் செயல்கள் மற்றும் இணையவழி திருட்டு, விபசாரம் போன்றவற்றிற்கு முகநூல் போலி கணக்குகளும் ஒரு காரணமாக காணப்படுகிறது.

இன்றைய காலத்தில் பல வன்முறைகள் முகநூலின் ஊடாக தவறாகவே பயன்படுத்தப்படுகின்றன.

இதில் அரசியல் பழிவாங்கல்களும் உள்ளடங்கும் .

அதன் அடிப்படையில், யாழ்.மாநகர முதல்வர் சட்டத்தரணி வி.மணிவண்ணன் குறித்தும் போலி முகநூல்களில் தவறான தகவல்கள் பகிரப்பட்டு வருகின்றது.

குறித்த போலி முகநூல்கள் ஊடாக, யாழ்.மாநகர முதல்வர் சட்டத்தரணி வி.மணிவண்ணன் கொரோனா நோய் தொற்றால் உயிரிழந்துள்ளதாக விசமத்தனமான பதிவுகளை பகிர்ந்துள்ளனர்.

யாழ்.மாநகர முதல்வர் சட்டத்தரணி வி.மணிவண்ணன், கொரோனா நோய் தொற்றுக்கு உள்ளான நிலையில் கிளிநொச்சி கொரோனா சிகிச்சை நிலையத்தில் சிகிச்சை பெற்று வருகின்றார்.

அத்துடன், கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்துள்ள மாநகர முதல்வர் ஓரிரு நாட்களில் வீடு திரும்பவுள்ளார்.

எனினும், இன்றையதினம் சிலர் போலி முகநூல் கணக்கின் ஊடாக முதல்வர் உயிரிழந்துள்ளார் என விசமத்தனமான பதிவுகளை பகிர்ந்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

625.0.560.320.310.730.053.800.670.160.90