வெடி பொருட்களுடன் நால்வர் கைது!

kaithu

மாத்தளை – நாவுல, எலஹெர வீதிக்கருகில் பகமுண பகுதியில் வெடிப்பொருட்களுடன் 4 சந்தேகநபர்களை காவற்துறையினர் இன்று (4) கைது செய்துள்ளனர்.

அனுமதிப்பத்திரமின்றி இவ்வாறு முச்சக்கர வண்டியொன்றில் கொண்டு செல்லப்பட்ட 20 கிராம் வெடி மருந்து, 3 கிலோ 230 கிராம் அமோனியம், 14 டெட்டனேட்டர்கள் மற்றும் 135 வோடர் ஜெல் குச்சிகள் ஆகியவற்றினைகாவற்துறையினர் பறிமுதல் செய்துள்ளனர்