ஐரோப்பிய நாடுகளில் பனை உற்பத்திக்கு பெரும் கேள்வி இருப்பதாக அமைச்சர் கலாநிதி ரமேஷ் பத்திரண தெரிவிப்பு!

Ramesh pathirana 0
Ramesh pathirana 0

கனடா போன்று ஐரோப்பிய நாடுகளில் பனை உற்பத்திக்கு பெரும் கேள்வி இருப்பதாக பெருந்தோட்டத்துறை அமைச்சர் கலாநிதி ரமேஷ் பத்திரண தெரிவித்துள்ளார்.

கொழும்பில் நேற்று (06) நடைபெற்ற பனை ஏற்றுமதியாளர்களின் கூட்டத்தில் அவர் உரையாற்றினார்.

இதன்போது, 2019 ஆம் ஆண்டிலும் பார்க்க கடந்த வருடத்தில் பெருந்தோட்ட துறையில் கூடுதலான வருமானம் கிடைக்கப்பெற்றுள்ளது. கொரோனா தொற்றுக்கு மத்தியில் இந்த வருமான இலக்கு இத்துறையில் பாரிய வெற்றியாகும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஒரே இடத்தில் பனை உற்பத்தியை பெற்றுக்கொள்ளும் வகையில் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.