நாடாளுமன்றில் கட்சி தலைவர்களின் விசேட கூட்டம் இன்று

18 1434612393 srilanka parliament57
18 1434612393 srilanka parliament57

நாடாளுமன்றில் இன்று மற்றும் நாளைய தினத்துக்கான நிகழ்ச்சி நிரல் தொடர்பில் கலந்துரையாடுவதற்காக விசேட கட்சி தலைவர்கள் கூட்டம் ஒன்று இடம்பெறவுள்ளது.

நாடாளுமன்ற அமர்வு ஆரம்பமாவதற்கு முன்னர் குறித்த கட்சித்தலைவர்களின் கூட்டமானது முற்பகல் 9 மணிக்கு சபாநாயகர் மகிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் இடம்பெறவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதற்கமைய, ஏப்ரல் 21 தாக்குதல் தொடர்பான ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கை தொடர்பில் இன்றைய தினமும் விவாதிப்பதா ? அல்லது வேறு விவாதம் ஒன்றினை நடத்துவதா? என்பது குறித்து இந்த கட்சி தலைவர்கள் கூட்டத்தின் போது தீர்மானிக்கப்படவுள்ளது.